Paristamil Navigation Paristamil advert login

Pantin : மூன்று ஜொந்தாமினர் மீது தாக்குதல்..!

Pantin : மூன்று ஜொந்தாமினர் மீது தாக்குதல்..!

18 புரட்டாசி 2024 புதன் 15:32 | பார்வைகள் : 1985


ஜொந்தாமினர் மூவரை அவமதித்து தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் ஒன்று Pantin நகரில் இடம்பெற்றுள்ளது.

கடந்த சனிக்கிழமை காலை 5 மணி அளவில் Avenue du Général-Leclerc வீதியில், கடமையில் இல்லாத மூன்று ஜொந்தாமினர் வாடகை மகிழுந்து ஒன்றுக்காக காத்திருந்தனர். அதன்போது அவர்களை நெருங்கிய மூவர் கொண்ட குழு, ஜொந்தாமினர்களை அவமதிக்கும் வகையில் சில தகாத வார்த்தைகளால் திட்டி, அவர்களை தாக்கியும் உள்ளனர்.

ஜொந்தாமினர் உடனடியாக அவசர இலக்கம் மூல (17) காவல்துறையினரை தொடர்புகொண்டு, அவர்களை அழைத்தனர். சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் வருகை தருவதற்கு முன்பாக இருவர் தப்பி ஓடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கு இலக்கானது 22, 23 மற்றும் 27 வயதுடைய இளம் ஜொந்தாமினர் எனவும், அவர்கள் பரிஸ் rue Henri-Barbusse வீதியில் உள்ள ஐரோப்பிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

Pantin நகர காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்