மத்திய கிழக்கிற்கு மீண்டும் விமான சேவைகளை நிறுத்திய எயார் பிரான்ஸ்!
18 புரட்டாசி 2024 புதன் 16:22 | பார்வைகள் : 13065
மத்திய கிழக்கிற்கான விமானசேவைகளை மீண்டும் நிறுத்தியுள்ளதாக எயார் பிரான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
நேற்று செப்டம்பர் 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை பரிசில் இருந்து Beirut மற்றும் Tel Aviv ஆகிய நகரங்களுக்கு புறப்பட இருந்த விமானம் இரத்துச் செய்யப்பட்டது. மறு அறிவித்தல் வரை சேவைகள் இயக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலமைகளை மிக நெருக்கமாக அவதானிப்பதாகவும், விமான சேவைகளை இயக்குவதில் உள்ள ஆபத்து தொடர்பில் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று செவ்வாய்க்கிழமை Hezbollah அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் 9 பேர் கொல்லப்பட்டும், 300 பேர் வரை காயமடைந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan