Paristamil Navigation Paristamil advert login

பரிசிலே ஒரு பாரிய கட்டிடம்..!!!

பரிசிலே ஒரு பாரிய கட்டிடம்..!!!

21 புரட்டாசி 2020 திங்கள் 11:30 | பார்வைகள் : 21233


110 மீட்டர் உயரம். செவ்வக வடிவம். நடுவில் ஜன்னல் மாதிரி பெரும் இடைவெளி. அதில் நடந்து திரியலாம். சைக்கிள் ஓடலாம். மல்லாக்க படுத்து விட்டத்தைப் பார்த்து குறட்டைவிட்டுத் தூங்கலாம். யாரும் கேட்கப் போவதில்லை. இந்தப் பாரிய கட்டிடம் எங்கே உள்ளது. சரிதான். லா டிபன்ஸ் பகுதியில்தான் அது உள்ளது. 
 
இந்தக் கட்டிடத்தின் பெயர் La Grande Arche de la Défense என்பது. ஆனால் இதற்கு, La Grande Arche de la Fraternité என்று இன்னொரு பெயரும் உண்டு. ‘சகோதரத்துவத்துக்கான பெரு வளைவு’ என்று தமிழில் சொல்லலாம். 
 
1985 ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்து, 1989 ஜூலை 14 அன்று திறந்து வைக்கப்பட்டது. முன்னதாக 1982 ஆம் ஆண்டு, அப்போதைய ஜனாதிபதி பிரான்சுவா மித்திரன் இந்தக் கட்டிடத்தை வடிவமைப்பவர்களுக்கு ‘தக்க பரிசு காத்திருக்கிறது’ என்று அறிவிக்க, பிரான்சில் இருந்து மட்டுமல்ல, உலகம் முழுவதிலும் இருந்தும் பல போட்டியாளர்கள் பங்குகொண்டு, பலவிதமான கட்டிடங்களை வரையோ வரையென்று வரைந்து தள்ளினார்கள். 
 
ஆனால் நாலு பக்கமும் நாலு கோட்டைப் போட்டு, சதுரமாக எளிமையாக கட்டிடத்தை வரைந்து கொண்டு வந்த, டென்மார்க் நாட்டைச் சேர்ந்த Johan Otto von Spreckelsen என்பவருக்குத்தான் பரிசு கிடைத்தது. அவரது பெயர்தான் வாய்க்குள் நுழையவில்லையே தவிர, அவர் வரைந்த கட்டிடம் பிரெஞ்சு அரசின் மனதுக்குள் நுழைந்து கொண்டது. 
 
நாலு பக்கமும் கோடுபோட்ட அந்த கட்டிட வடிவமைப்பைப் பார்த்த ஏனைய வடிவமைப்பாளர்கள் ‘ஏம்மா இதெல்லாம் ஒரு கட்டிடமாம்மா?’ என்று கிண்டலடித்தபோதும், கடுகதியில் கட்டிட நிர்மாண வேலைகளை ஆரம்பித்தது அரசு. 
 
வேலையை ஆரம்பிக்கும்போதுதான் அந்த தலைவலி வந்து சேர்ந்தது அரசுக்கு. அது என்ன தலைவலி? 
 
நாளை வரும் - தலைவலி அல்ல..! 
 
பதில்...!!!

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்