Paristamil Navigation Paristamil advert login

பிரதமர் அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள்... அமைச்சரவை அறிவிக்கப்படவில்லை!

பிரதமர் அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள்... அமைச்சரவை அறிவிக்கப்படவில்லை!

19 புரட்டாசி 2024 வியாழன் 06:19 | பார்வைகள் : 3668


நாட்டின் புதிய பிரதமராக Michel Barnier அறிவிக்கப்பட்டு இன்றுடன் இரண்டு வாரங்கள் ஆகின்றன. என்றபோதும் அவர் தனது புதிய அமைச்சரவையை அறிவிக்கவில்லை. பதவி விலக உள்ள அமைச்சர்களே தொடர்ந்தும் அமைச்சர்களாக கடமையாற்றி வருகின்றனர்.

பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் புதிய பிரதமர், செவ்வாய்க்கிழமை காலை தனது புதிய அமைச்சர்கள் பட்டியலை ஜனாதிபதி மக்ரோனிடம் கையளித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, வரி அதிகரிப்பு ஒன்றை அறிவிக்க அரசாங்கம் தயாராகி வருவதாகவும், இந்த அழுத்ததினை புதிய பிரதமர் Michel Barnier மீது ஜனாதிபதி தரப்பு திணிப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வரி அதிகரிப்பு விவகாரம் ஏனைய கட்சியினரிடையே பெரும் கோபத்தை தூண்டியுள்ளது. Marine Le Pen தெரிவிக்கையில், “வரி அதிகரிப்பை கடுமையாக கண்டிக்கிறேன். பிரெஞ்சுக்காரர்களால் இனிமேல் எதையும் தாங்க முடியாது. அரசு மீது நம்பிக்கை இல்லா பிரேரணை கொண்டுவருவதைத் தவிர வேறு வழி இல்லை!” என அவர் தெரிவித்தார்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்