காலிஃபிளவர் பக்கோடா..
19 புரட்டாசி 2024 வியாழன் 15:47 | பார்வைகள் : 765
மாலையில் பள்ளி மற்றும் அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வருபவர்கள் தினமும் ஏதாவது சூடாக சாப்பிடவேண்டும் என்று ஆசைப்படுவார்கள். வீட்டில் உள்ளவர்களும் என்ன சமைக்கலாம் என்று தினமும் யோசிப்பது வழக்கம். அவர்களுக்காக தான் இந்த ரெசிபி பதிவே…
ஆம் இன்று இங்கே நாம் பார்க்கப்போகும் ரெசிபியானது வீட்டிலேயே எளிய செய்முறையில் சுவையான மொறுமொறு காலிஃபிளவர் பக்கோடாவை எப்படி செய்யலாம் என்றுதான். வாங்க பார்க்கலாம்…
தேவையான பொருட்கள் :
காலிஃப்ளவர் - 1
கடலை மாவு -1 கப்
மஞ்சள் தூள் - சிறிதளவு
சிகப்பு மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 1/2 டீஸ்பூன்
பூண்டு விழுது - அரை டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
முதலில் காலிஃப்ளவரை நன்றாக அலசி அதன் பூக்களை சிறிது சிறிதாக தனித் தனியே பிரித்து எடுத்து வைத்துக்கொள்ளவும்
பின்னர் ஒரு அகலமான பாத்திரத்தில் கடலை மாவு, பூண்டு விழுது, மஞ்சள் தூள், சிகப்பு மிளகாய் தூள், கரம் மசாலா தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை போட்டு போதுமான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கட்டி இல்லாமல் கலந்துக்கொள்ளுங்கள்.
பின்னர் அந்த மாவில் தனித்தனியே பிரித்து வைத்துள்ள காலிஃபிளவர் பூக்களை சேர்த்து மாவுடன் சேரும் அளவிற்கு நன்றாக கலந்து குறைந்தது அரை மணி நேரம் ஊற விடவும்.
தற்போது அடுப்பில் அடிகனமான வாணலி ஒன்றை வைத்து பக்கோடா பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடாக்கிக்கொள்ளவும்.
எண்ணெய் நன்றாக சூடானதும் மாவில் கலந்துவைத்துள்ள காலிஃப்ளவரை எடுத்து சிறிது சிறிதாக உருட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும்.
பக்கோடா நன்கு மொறுமொறுவென்று வெந்தவுடன் எண்ணெய்யில் இருந்து எடுத்து சூடாக அனைவருக்கும் பரிமாறி மகிழுங்கள்…