Paristamil Navigation Paristamil advert login

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு: ஆய்வில் உறுதியானதால் அதிர்ச்சி

திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு: ஆய்வில் உறுதியானதால் அதிர்ச்சி

19 புரட்டாசி 2024 வியாழன் 17:05 | பார்வைகள் : 242


திருமலை திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டுள்ளது தொடர்பான சமீபத்திய ஆய்வறிக்கை வெளியாகியுள்ளதன் மூலம் குற்றச்சாட்டு நிரூபணமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சியின் சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளில் கொழுப்பு கலப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் உணர்வுகளை மதிக்காததை கண்டு முந்தைய முதல்வர் ஜெகன்மோகனும், அவரது கட்சியும் அவமானப்பட வேண்டும் என்றார். இவரது பேட்டி பக்தர்களை அதிர்வடைய செய்துள்ளது.

இது தொடர்பாக தெலுங்கு தேச கட்சியின் வெங்கடரமண ரெட்டி வெளியிட்ட அறிக்கையில்,

திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் மாதிரிகுஜராத்தில் உள்ள தேசிய கால்நடை ஆராய்ச்சி, ஆய்வுக்கூடத்தில் கடந்த ஜூலை மாதம் பரிசோதனை செய்யப்பட்டதில் தரமற்ற நெய் விநியோகிக்கப்பட்டுள்ளது, அதில் மீன் எண்ணெய், பன்றியின் கொழுப்பு, மாட்டு கொழுப்பு, பாமாயில், சோயா எண்ணெய் ஆகியன கலந்துள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது என்றார்.

தேவஸ்தான செயல் அதிகாரி கூறியது, கடந்த இரு மாதங்களுக்கு முன் 8.5 லட்சம் கிலோ நெய் விநியோகம் கோரி விடப்பட்ட டெண்டரில் அந்த டெண்டர் நிறுவனம் 68 ஆயிரம் கிலோ நெய் சப்ளை செய்ததில் 20 ஆயிரம் கிலோ நெய் தரமற்றதாக உள்ளதாக எழுந்த புகாரில் விசாரணை நடத்தி நெய் சப்ளை நிறுத்தப்பட்டு, டெண்டர் நிறுவனம் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது என்றார்.


ஜெகன் மறுப்பு

முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டை ஓய்.எஸ்.ஆர். காங். கட்சியின் முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மறுத்துள்ளார்.

ஓய்.எஸ்.ஆர்.,கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் திருமலையின் புனிதத்தையும் பல நூறு கோடி இந்துக்களின் நம்பிக்கையையும் புண்படுத்தியுள்ளார் முதல்வர் சந்திரபாபு நாயுடு. லட்டு பிரசாதம் தொடர்பாக நாயுடுவின் கருத்துக்களில் உண்மையில்லை. அரசியலுக்காக எந்த மட்டத்திலும் இறங்க தயங்கமாட்டார் என்பது நிரூபணமாகியுள்ளது. என்றார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்