Paristamil Navigation Paristamil advert login

ஒரே நாடு ஒரே தேர்தல்; நடைமுறைக்கு சாத்தியமற்றது: முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல்; நடைமுறைக்கு சாத்தியமற்றது: முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு

19 புரட்டாசி 2024 வியாழன் 17:08 | பார்வைகள் : 3161


ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

பார்லிமென்டுக்கும், சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும், 'ஒரே நாடு - ஒரே தேர்தல்' முறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக சட்டத்தை விரைவில் கொண்டு வருவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது என முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,' ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. பா.ஜ.,வின் ஈகோவை திருப்திப்படுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை பா.ஜ.,வால் நடை முறைக்கு கொண்டு வரமுடியாது.இந்தியாவின் வேறுபட்ட தேர்தல் நடைமுறை சிக்கல்களை கவனத்தில் கொள்ளவில்லை

வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற பிரச்னைகளை தீர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு கட்சியின் ஆசைக்கு ஏற்ப இந்திய ஜனநாயகத்தை வளைக்க முடியாது. திசை திருப்பும் நடவடிக்கையில் நேரத்தை செலவிடாமல் பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்