புதிய அமைச்சரவை பட்டியல் இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும்!!

20 புரட்டாசி 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 6387
புதிய அமைச்சரவை அடுத்த இரண்டு நாட்களுக்குள் அறிவிக்கப்படும் என எலிசே மாளிகை தெரிவித்துள்ளது.
பிரதமராக Michel Barnier அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேலாகியுள்ள நிலையில், புதிய அமைச்சரவையை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அரசியல் தலைவர்களுடனும், முன்னாள் பிரதமர்களுடனும் அவர் சந்திப்பில் ஈடுபட்டிருந்தார். இறுதியாக நேற்று மாலை ஜனாதிபதி மாளிகையில் வைத்து இம்மானுவல் மக்ரோனைச் சந்தித்து உரையாடினார்.
அதன்போது, 38 பேர் கொண்ட அமைச்சரவைப் பட்டியலை சமர்ப்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் புதிய அமைச்சர்கள் பட்டியல் அறிவிக்கப்படும் என எலிசே மாளிகை குறிப்பிட்டுள்ளது.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1