இஸ்ரேல் நாட்டை பகிரங்கமாக எச்சரிக்கை விடுக்கும் ஹிஸ்புல்லா
20 புரட்டாசி 2024 வெள்ளி 10:21 | பார்வைகள் : 2799
இஸ்ரேல் (Israel), தமது தொடர்பாடல் சாதனங்கள் மீது இந்த வாரம் பாரிய தாக்குதலை நடத்தியுள்ளது.
தினசரி நடவடிக்கைகளை தமது அமைப்பு தொடர்வதாக ஹிஸபுல்லாவின் (Hezbollah) தலைவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் லெபனான் எல்லைக்கு அருகில் உள்ள வீடுகளில் இருந்து, போரினால் இடம்பெயர்ந்த இஸ்ரேலியர்கள் காசாவில் போர் முடியும் வரை திரும்பி வர முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், தொடர்பு சாதனங்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஹிஸ்புல்லாவின், ஆயிரக்கணக்கான பேஜர்கள் மற்றும் வோக்கி-டோக்கிகளை குறிவைத்து நடத்தப்பட்ட இரண்டு தாக்குதல்கள் தொடர்பில் இஸ்ரேல் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
இது, ஹிஸ்புல்லாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையில் 11 மாதங்கள் இடம்பெற்று வரும் கிட்டத்தட்ட தினசரி துப்பாக்கிச் சண்டைகள் முழுப் போராக விரிவடையும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது.
முன்னதாக, ஹிஸ்புல்லா உறுப்பினர்களை ஒரே நேரத்தில் குறிவைத்தது, கடந்த செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் இடம்பெற்ற தொடர்பு சாதன குண்டுவெடிப்புகளில் இரண்டு குழந்தைகள் உட்பட குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டதுடன் 3,000 பேர் காயமடைந்தனர்.