Paristamil Navigation Paristamil advert login

இடிந்து விழுந்த மேம்பாலம்.. சிக்கிக்கொண்ட 600 பேர்!

இடிந்து விழுந்த மேம்பாலம்.. சிக்கிக்கொண்ட 600 பேர்!

27 ஐப்பசி 2024 ஞாயிறு 17:35 | பார்வைகள் : 4833


Var மாவட்டத்தில் மேம்பாலம் ஒன்று இடிந்து விழுந்ததில், 600 இற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டுள்ளனர்.

Le Muy எனும் பகுதியினை ஊடறுக்கும் Couloubrier ஆற்றுக்கு மேலாக கட்டப்பட்ட பாலம் ஒன்றே இடிந்து உள்நோக்கி விழுந்துள்ளது. அங்குள்ள உள்ள தனியருக்குச் சொந்தமான மலைப்பகுதி தோட்டம் ஒன்றுக்குச் செல்லும் ஒரே வழியில் உள்ள இந்த மேம்பாலம் இடிந்ததில், அறுநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அங்கு சிக்கிக்கொண்டுள்ளதாகவும், அவர்களை மீட்கும் முயற்சிகளை தீயணைப்பு படையினர் மேற்கொண்டுவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆற்றில் நீர்போக்குவரத்து அதிகமாக இருப்பதால், மாற்று வழியகள் பயன்படுத்துவதில் சிக்கல் எழுந்துள்ளதாகவும், கடந்த சில நாட்களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக மேம்பாலம் இடிந்து உள்நோக்கி மடிந்து விழுந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அப்பகுதியில் சிக்கிக்கொண்டவர்களுக்கு மின்சாரமும், தண்ணீரும் கிடைக்கிறது எனவும், அது தற்போதைக்கு ஆறுதலான செய்தி எனவும் தெரிவிக்கப்படுகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்