வரவுசெலவுத் திட்டம் 2025 : நாளை மீண்டும் விவாதம்.. 5 பில்லியன் யூரோக்கள் சேமிப்பு!
27 ஐப்பசி 2024 ஞாயிறு 17:44 | பார்வைகள் : 1710
கடந்தவாரம் முழுவதும் 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் குறித்து பாராளுமன்றத்தில் ஆராயப்பட்டு வந்தது. பல்வேறு வாக்கெடுப்புகளும் இடம்பெற்றன. இந்நிலையில், நேற்று சனிக்கிழமை மாலை முதல் விடுமுறை வழங்கப்பட்டது. அதன் பின்னர் நாளை திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் விவாதங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன.
Michel Barnier இன் அரசாங்கம் அறிவித்த வரவுசெலவுத்திட்டத்தில் மொத்தமாக 2,200 திருத்தங்கள் இடம்பெற உள்ளதாகவும், குறிப்பாக சுகாதாரத்துறை தொடர்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இம்முறை வரவுசெலவுத்திட்டத்தில் மொத்தமாக 5 பில்லியன் யூரோக்கள் பணத்தினை சேமிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.