வரவுசெலவுத்திட்டம் 2025 : பொதுப்பணித்துறைக்கான விடுமுறையில் மாற்றம்..!!
28 ஐப்பசி 2024 திங்கள் 07:00 | பார்வைகள் : 3042
பொதுப்பணித்துறையில் பணிபுரிவோருக்கான ‘சுகயீன விடுமுறை’ தொடர்பில் பல்வேறு மாற்றங்களை இந்த 2025 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் கொண்டுவருகிறது. அது தொடர்பான விவாதம் இன்று திங்கட்கிழமை மாலை ஆரம்பமாகும் பாராளுமன்ற அமர்வில் இடம்பெற உள்ளது.
சுகயீன விடுமுறைக்காக இதுவரை 100% சதவீத ஊதியம் வழங்கப்பட்டு வந்த நிலையில், புதிய வரவுசெலவுத்திட்டத்தின் படி அது 90% சதவீதமாக குறைக்கப்பட உள்ளதாக அறிய முடிகிறது. இந்த 10% சதவீத குறைப்பினால் 900 மில்லியன் யூரோக்கள் சேமிக்க முடியும் என இந்த வரைவு தெரிவிக்கிறது.
முதல் மூன்று மாதங்களுக்காக சுகயீன விடுமுறைக்கு 90% சதவீத ஊதியமும், அதற்கு பின்னரான விடுமுறைக்கு 50% சதவீதமான ஊதியமும் வழங்கப்பட இந்த வரவுசெலவுத்திட்டம் பரிந்துரை செய்கிறது.
இந்த திருத்தம் நடைமுறைக்கு வருமா என்பது பாராளுமன்ற விவாதம் மற்றும் வாக்கெடுப்பின் பின்னரே தெரியவரும்.