மொராக்கோவில் மக்ரோன்.. !
28 ஐப்பசி 2024 திங்கள் 08:46 | பார்வைகள் : 2769
இன்று ஒக்டோபர் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதிவரையான மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் மொராக்கோவுக்கு (Maroc) பயணமாகியுள்ளார்.
பிரான்ஸ்-மொராக்கோ நாடுகளுக்கிடையே இராஜதந்திர முறுகல் நிலை கடந்த ஆண்டுகளில் நிலவியிருந்த போதும், இரு நாடுகளின் நட்புறவை பேணுவதற்காக அரசுமுறைப் பயணத்தை மக்ரோன் மேற்கொண்டுள்ளார். அவருடன் முதல் பெண்மணி பிரிஜித் மக்ரோன், உள்துறை அமைச்சர் Bruno Retailleau, ஆயுதப்படை அமைச்சர் Sébastien Lecornu ஆகியோரும் பயணிக்கின்றனர்.
மொராக்கோவின் மன்னர் Mohammed VI இனைச் சந்தித்து உரையாடி, விருந்துபசாரத்திலும் கலந்துகொள்வார்கள் என அறிய முடிகிறது.
“ஃபிராங்கோ-மொராக்கோ ஒரு புதிய நட்பில் இணைகிறது. வேறு நாடுகளின் தூண்டுதல்கள் இல்லாமல்’ இந்த நட்பு உருவாகியுள்ளது. அடுத்த 30 ஆண்டுகளுக்கு இந்த நட்பு தொடரும்” என எலிசே மாளிகை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
2013 ஆம் ஆண்டின் பின்னர் பிரெஞ்சு ஜனாதிபதி ஒருவர் மொராக்கோ செல்கிறமை குறிப்பிடத்தக்கது.