Apple Intelligence : பிரான்சுக்கு வருகிறது..!!

28 ஐப்பசி 2024 திங்கள் 16:58 | பார்வைகள் : 5794
ஆப்பிள் தொலைபேசிகளில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டுள்ள Apple Intelligence வசதிகள் வரும் ஏப்ரல் மாதம் பிரான்சுக்கு வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருட ஜூன் மாதத்தில் இந்த செயற்கை நுண்ணறிவு குறித்து ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. ஆனால் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய வகை தொலைபேசிகளான iPhone 16 சீரீஸ் தொலைபேசிகளை வெளியிடும் போது இந்த Apple Intelligence குறித்த மேம்படுத்தலை வெளியிட்டிருக்கவில்லை. அது பின்னரே வெளியிடப்படும் என தெரிவித்திருந்தது.
இந்நிலையில், “Apple Intelligence 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் மேம்படுத்தல் மூலமாக ஐரோப்பா முழுவதும் ஐபோன், ஐபேட் சாதனங்களுக்கு வழங்கப்படும். ” என ஆப்பிள் நிறுவனம் அறிவித்துள்ளது.
SIRI சேவைகளில் பல்வேறு வசதிகளையும், Genmoji எனும் வசதினையும், வேகமாகவும், எழுத்தினை மேம்படுத்தவும் கூடிய வசதிகளை, புகைப்படங்களை அடையாளம் காணும் திறனையும் இந்த புதிய Apple Intelligence கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.