Paristamil Navigation Paristamil advert login

மெற்றோவின் கூரை மீது சாகசம்! - இருவர் கைது!

மெற்றோவின் கூரை மீது சாகசம்! - இருவர் கைது!

28 ஐப்பசி 2024 திங்கள் 20:00 | பார்வைகள் : 8116


ஆறாம் இலக்க மெற்றோ தொடருந்தின் கூரையில் ஏறி நடந்து திரிந்த இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Bir-Hakeim மற்றும் Passy நிலையங்களுக்கிடையே இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒக்டோபர் 27 ஆம் திகதி இடம்பெற்றுள்ளது. ஓடும் தொடருந்தின் மீது எழுந்து நின்று சாகசம் புரிந்து அதனைக் காணொளியாக பதிவு செய்ய முற்பட்டதாகவும், அதன் போதே அவர்கள் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களுக்கு ஒருவருட சிறையும், 15,000 யூரோக்கள் குற்றப்பணமும் அறவிட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்