லோகேஷ் கனகராஜுடன் இணையப்போகும் சூர்யா...?
29 ஐப்பசி 2024 செவ்வாய் 14:59 | பார்வைகள் : 999
சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் 'கங்குவா'. இந்தப் படம் நவம்பர் 14-ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது படக்குழு.
மும்பை, தமிழ்நாடு, ஹைதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில் கங்குவா பட ப்ரோமோஷன் முடிந்துள்ளது. மும்பையில் ஹாலிவுட் நாவலுக்கு சூர்யா கொடுத்த பேட்டியில் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணியாற்றுவது குறித்துப் பேசியிருந்தார்.
அவர் கூறுகையில், "ரோலக்ஸ்', 'இரும்புகை மாயாவி' இந்த இரண்டு படங்கள் குறித்து லோகேஷ் கனகராஜும் நானும் பேசியுள்ளோம். லோகேஷின் கனவுப் படம் 'இரும்புகை மாயாவி'.
'இரும்புகை மாயாவி' படம் குறித்துப் பேசியிருக்கிறோம். ஆனால் அந்தப் படம் மீண்டும் என்னிடம் வருமா அல்லது பெரிய நடிகர்களிடம் செல்லுமா என்று எனக்குத் தெரியாது. சேர்ந்து படம் பண்ணும் எண்ணம் எங்கள் இருவருக்குமே உள்ளது, அதற்காக தயாரிப்பாளரும் காத்திருக்கிறார்.
நானும் 2, 3 படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறேன், சில படங்களின் படப்பிடிப்பு சீக்கிரம் முடிந்துவிடுகிறது, சில படங்களின் படப்பிடிப்பு முடிய சில வருடங்கள் ஆகிறது. ரஜினி, கமல் என லோகேஷ் கனகராஜ் செய்யும் படங்கள் பெரிதாகிக் கொண்டே இருக்கிறது. மீண்டும் லோகேஷ் கனகராஜுடன் இணைந்து பணிபுரிவேன் என்று நம்புகிறேன்" என்று கூறினார்.