Paristamil Navigation Paristamil advert login

தீபாவளி கறிக்குழம்பு

தீபாவளி கறிக்குழம்பு

29 ஐப்பசி 2024 செவ்வாய் 15:00 | பார்வைகள் : 665


தீபாவளி என்றாலே சிக்கனும் இட்லியும்தான் முதல் பிரதானம். நல்லெண்ணெய் தேய்த்து சூடான குளியலை முடித்துவிட்டு, புத்தாடை உடுத்தி சூடாக அந்த இட்லியும் சிக்கன் குழம்பையும் சாப்பிட்டால்தான் தீபாவளி முழுமையடையும். அப்படி இந்த தீபாவளிக்கு நீங்கள் சிக்கன் குழம்பு வைக்கிறீர்கள் எனில் இந்த ரெசிபியை டிரை பண்ணி பாருங்க. ஒரு கிலோ சிக்கனுக்கு இந்த ரெசிபி சரியாக இருக்கும்.

தேவையான பொருட்கள் :

மசாலா பேஸ்ட் அரைக்க :

எண்ணெய் - 1 ஸ்பூன்
ஏலக்காய் - 1
சோம்பு - 1/2 ஸ்பூன்
பட்டை - 1 துண்டு
மிளகு - 1 1/2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 5
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 20 பள்ளு

குழம்பு வைக்க :

எண்ணெய் - 3 ஸ்பூன்
பிரிஞ்சு இலை - 1
வெங்காயம் - 3
தக்காளி - 2
கறிவேப்பிலை - 1 கொத்து
குழம்பு மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கொத்தமல்லி - கைப்பிடி அளவு

செய்முறை :

முதலில் மசாலா பேஸ்ட் அரைத்துக்கொள்ள தேவையான பொருட்களை தயார் செய்துக்கொள்ளுங்கள்.

பின் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு பொருளையும் ஒன்றன் பின் ஒன்றாக போட்டு வதக்குங்கள்.

பின் ஆற வைத்து தண்ணீர் ஊற்றி மைய அரைத்துக்கொள்ளுங்கள்.

இப்போது குக்கர் வைத்து எண்ணெய் ஊற்றி பிரிஞ்சு இலை சேர்த்து பின் வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.

வதங்கியதும் தக்காளி, கறிவேப்பிலை சேர்த்து குழைய வதக்கிக்கொள்ளுங்கள்.

எண்ணெய் பிரிந்து வரும் வரை வதங்கியதும் அலசி வைத்துள்ள கறியை சேர்த்து நன்கு பிரட்டுங்கள்.

அடுத்ததாக மஞ்சள் தூள், குழம்பு மிளகாய் தூள் மற்றும் அரைத்த பேஸ்ட் சேர்த்து நன்கு கலந்து விடுங்கள். அதோடு தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

5 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள்.

பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கிளறிவிட்டு குக்கரை மூடிவிடுங்கள்.

குக்கர் 3 விசில் வந்ததும் இறக்கிவிடுங்கள். விசில் போனதும் கொத்தமல்லி தூவி பரிமாறுங்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்