மக்ரோனின் மறுமலர்ச்சி கட்சி தலைவர் போட்டியில் Gabriel Attal..!!
30 ஐப்பசி 2024 புதன் 07:00 | பார்வைகள் : 2248
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோனின் Renaissance கட்சியின் தலைமைப்பதவிக்கு முன்னாள் பிரதமர் Gabriel Attal போட்டியிடுகின்றார்.
இந்த பதவிக்கு அதே கட்சியைச் சேர்ந்த மற்றுமொரு முன்னாள் பிரதமர் Elisabeth Borne போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அவர் இந்த போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதை அடுத்து அந்த பதவிக்கு Gabriel Attal போட்டியிட உள்ளதாக நேற்று ஒக்டோபர் 29 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
நவம்பர் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் அக்கட்சியின் பொதுக்கூட்டம் இடம்பெற உள்ளது. அதை அடுத்து, தலைவர் தெரிவுக்கான வாக்கெடுப்பு டிசம்பர் 7 ஆம் திகதி இடம்பெற உள்ளது.
கட்சி அங்கத்தினரிடையே ஆதரவோடு இருக்கும் Gabriel Attal , அக்கட்சியின் தலைவராக வருவார் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.