பிரான்சில் வீதியில் மரணங்கள் அதிகரித்து செல்கிறது. Les Morts de la rue.
30 ஐப்பசி 2024 புதன் 07:35 | பார்வைகள் : 1983
யாரும் கண்டுகொள்ளாமல், யாரும் கவலைப்படாமல், மறைக்கப்பட்டு அல்லது மறக்கப்பட்டு நடக்கிறது இந்த வீதி மரணங்கள். 2022 இல் 638 மரணங்கள் வீதியில் நிகழ்ந்த நிலையில் 2023 இல் அதிகரித்து 735 மரணங்கள் நிகழ்ந்துள்ளது என 'Les Morts de la rue' எனும் அமைப்பு தமது வருடாந்த அறிக்கையில் கவலை வெளியிட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பத்து நபர்களில் ஒன்பது பேர் ஆண்கள் என தெரிவிக்கும் அறிக்கை, இலையுதிர் காலத்தில் 23% சதவீதமும், கோடைக்காலத்தில் சம அளவிலும், வசந்த காலத்தில் சற்று குறைந்து 21% சதவீதத்திலும் நிகழ்கிறது. அதுவே குளிர்காலத்தில் 31% சதவீதம் அதிகரிக்கிறது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது ஒரு கொடிய பருவம் என அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
முகவரி இல்லாமல் வீதிகளில் வாழும் மக்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி இன்று 330,000 எட்டியுள்ள என தமது அறிக்கையில் தெரிவித்துள்ள 'Les Morts de la rue' எனும் அமைப்பு, வீடுகளில் வாழும் மக்களின் மரணங்கள் சராசரியாக 79 வயது என்றால் வீதியில் வாழும் மக்களின் மரணங்கள் ஏறத்தாழ 48 வயதில் நிகழ்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.