Paristamil Navigation Paristamil advert login

'கங்குவா' படத்தின் பிரபலம் மர்ம மரணம்..

'கங்குவா' படத்தின் பிரபலம் மர்ம மரணம்..

30 ஐப்பசி 2024 புதன் 09:47 | பார்வைகள் : 1078


சூர்யா நடித்த ’கங்குவா’ படத்தில் பணிபுரிந்த பிரபலம் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சூர்யா நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகிய ’கங்குவா’ திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் தனது வீட்டில் மர்மமான முறையில் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.

மலையாள திரைப்படம் ’தள்ளுமாலா’ மூலம் புகழ்பெற்ற எடிட்டர் நிஷாத் யூசுப், அவரது திறமையை மதித்து சிறுத்தை சிவா, நிஷாத் யூசுப்பை ‘கங்குவா’ படத்தின் எடிட்டராக ஒப்பந்தம் செய்தார். இதனால் படத்தின் எடிட்டிங் வேறு லெவலுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் நிஷாத் யூசுப் கொச்சியில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் மரணமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவரது மரணத்திற்கு காரணம் இதுவரை தெரியவில்லை என்றும், காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

43 வயதான நிஷாத் யூசுப் அவர்களின் மரணம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் பெரும் இழப்பாக கருதப்படுகிறது; திரையுலகினர் அவருக்கு இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்