Paristamil Navigation Paristamil advert login

ஆபிரிக்காவில் பிரெஞ்சு இராணுவ வீரர் பலி..!

ஆபிரிக்காவில் பிரெஞ்சு இராணுவ வீரர் பலி..!

31 ஐப்பசி 2024 வியாழன் 07:00 | பார்வைகள் : 2255


வாகன விபத்து ஒன்றுக்கு உள்ளாகி பிரெஞ்சு இராணுவவீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கிழக்கு ஆபிரிக்காவின் Djibouti நாட்டில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Corporal Vasil Bychyk எனும் 26 வயதுடைய இளம் இராணுவ வீரரே கொல்லப்பட்டுள்ளார். தனது கடமைகளை முடித்துக்கொண்டு முகாமுக்கு திரும்பிம்பிக்கொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகி காயமடைந்துள்ளார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆயுதப்படைகளுக்கான அமைச்சர் Sébastien Lecornu இது குறித்து தனது கவலைகளை வெளியிட்டுள்ளார்.

கிழக்கு ஆபிரிக்காவின் Djibouti நாட்டில் 1,500 பிரெஞ்சு இராணுவத்தினர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது. அங்கு அவர்கள் 'குறுகியகால நடவடிக்கை' ஒன்றில் ஈடுபட்டு வருவதாகவும், 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் அவர்கள் நாடு திரும்புவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(புகைப்படத்தில் : விபத்தில் பலியான இராணுவவீரர் Corporal Vasil Bychyk)

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்