ரஷ்யா-வடகொரியா தொடர்பில் ஜோ பைடனின் கருத்து
31 ஐப்பசி 2024 வியாழன் 12:57 | பார்வைகள் : 936
வடகொரிய வெளியுறவு அமைச்சர் ரஷ்யாவிற்கு புறப்பட்ட நிலையில் அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
உக்ரைனுக்கு எதிரான போரில் ஈடுபட, வடகொரிய வீரர்கள் சுமார் 10,000 ரஷ்யாவிற்கு சென்றுள்ளதாக பென்டகன் செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங் அண்மையில் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து, வடகொரிய வெளியுறவு அமைச்சர் Cho Son-Hui பியாங்யாங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ரஷ்யாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயத்திற்காக கிளம்பியதாக செய்தி வெளியானது.
ரஷ்யா, வடகொரியா இடையிலான உறவுகளை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, இந்த விஜயம் "ஒரு மூலோபாய உரையாடலின் கட்டமைப்பிற்குள் நடைபெறுகிறது" என வெளியுறவு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே ரஷ்யாவில் வாடகொரிய துருப்புகள் இருப்பதைப் பற்றி மேற்கத்திய நாடுகளின் கவலை இருக்கும் நிலையில், அமைச்சரின் ரஷ்யா பயணம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் முன்னதாகவே வாக்களித்த ஜோ பைடன் (Joe Biden) செய்தியாளர்களை சந்தித்தபோது "இது மிகவும் ஆபத்தானது" என கூறினார்.
மேலும் அவர், வடகொரிய துருப்புகள் ரஷ்யாவிற்கு சென்றுள்ளதாக வெளியான கவலை அளிப்பதாகவும், வடகொரிய வீரர்கள் நாட்டிற்குள் நுழைந்தால் உக்ரைன் தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.