நெடுஞ்சாலையில் உள்ள புதிய ரேடார் கருவிகளும் அதன் திறன்களும்...!!
11 புரட்டாசி 2019 புதன் 10:30 | பார்வைகள் : 18757
பிரெஞ்சு புதினங்கள் எப்போதும் ஆச்சரியத்தையும் அவ்வப்போது அவசியமான தகவல்களையும் தருகின்றது. இன்றைய பிரெஞ்சு புதினம் நீங்கள் அவசியம் தெரிந்துகொள்வதோடு, பகிர்ந்துகொள்ள வேண்டிய தகவல்களுமாகும்.
முன்னர் அமைக்கப்பட்டிருந்த வீதி கண்காணிப்பு ரேடார் கருவிகளை சில விஷக்கிருமிகள் அடித்து நொருக்கியும், தீ மூட்டியும் சேதங்கள் ஏற்படுத்தியிருந்தனர். அரசுக்கு இதனால் ஏகப்பட்ட நஷ்ட்டம். சரி அதை விடுவோம்.
Mesta Fusion என அழைக்கப்படும் இவ்வகை ரேடார் கருவிகள் உலகில் அதிக நாடுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
தரையில் இருந்து சுமார் நான்கு மீற்றர் உயரம் கொண்ட இவ்வகை ரேடார் கருவிகளின் திறன்கள் குறித்து அறிந்துகொண்டால் ஆச்சரியப்படுவீர்கள்.
இதில் மிக அகலமான ( wide) போட்டோக்களை எடுக்கக்கூடிய 24 மெகாபிக்சல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
ஒரே நேரத்தில் வெவ்வேறு வாகனங்கள் மேற்கொள்ளும் வெவ்வேறு தவறுகளை கண்காணிக்கும் திறன் கொண்டது. உதாரணத்துக்கு அதிவேகமாக செல்லும் வாகனம் ஒன்றையும், சிக்னலில் நிற்காமல் செல்லும் வாகனம் ஒன்றையும், தவறான இடத்தில் திருப்பும் மகிழுந்து ஒன்றையும் ஒரே நேரத்தில் கண்காணித்து தகவல்கள் திரட்டும். இப்படி மொத்தம் 32 வாகனங்களை ஒரே நேரத்தில் கண்காணிக்கும்.
தகவல் என்றால் வாகனத்தின் புகைப்படம், லொக்கேஷன் (இடம்), இலக்கத்தகடு, நேரம், வாகனத்தின் வேகம் என்பதோடு முன்னுக்குச் செல்லும் வாகனத்துக்கும் இதற்குமான இடைவெளியையும் கண்காணிக்கும்.
ரேடர் அமைக்கப்பட்டிருக்கும் இடத்தில் இருந்து 200 மீற்றர் தூரம் வரை கண்காணிக்கும். ஒரு வாகனத்தினை வெறுமனே 3 நொடிகளுக்குள்ளாக கணித்துவிட்டு அடுத்த வாகனத்துக்குச் சென்றுவிடும்.
ஆச்சரியப்படும் படி, இக்கருவி ஒரே நேரத்தில் எட்டு வழி சாலைகளை அவதானிக்கும். சாரதிகள் எந்த ஒரு இடத்தில் பிசுறு தட்டினாலும் ரேடர் கண்டுபிடித்துவிடும்.
மணிக்கு 320 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ஒரு வாகனத்தின் தகவல்களை கூட ஒரு நொடிக்குள்ளாக கண்டுபிடித்துவிடும்.
இது மட்டுமா... இன்னும் இருக்கின்றது ஏராளமாய்... நாளை பார்க்கலாம்..!!