Paristamil Navigation Paristamil advert login

முன்னாள் பிரதமர்களை அழைக்கும் செனட் சபை!

முன்னாள் பிரதமர்களை அழைக்கும் செனட் சபை!

1 கார்த்திகை 2024 வெள்ளி 08:13 | பார்வைகள் : 2134


பொது நிதியில் ஏற்பட்ட சறுக்கலுக்கு விளக்கமளிக்க முன்னாள் பிரதமர்கள் Elisabeth Borne மற்றும் Gabriel Attal ஆகிய இருவரும் செனட் சபையினரால் அழைக்கப்பட்டுள்ளனர். அவர்களுடன் முன்னாள் பொருளாதார அமைச்சர் Bruno Le Maire ம் அழைக்கப்பட்டுள்ளார்.

நவம்பர் 7 ஆம் திகதி காலை 8 மணிக்கு இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பமாக உள்ளது. அன்று பிற்பகல் 3.30 மணிக்கு Bruno Le Maire அழைக்கப்பட்டுள்ளார். மறுநாள் காலை 9 மணிக்கு Gabriel Attal அழைக்கப்பட்டுள்ளார்.

பின்னர் நவம்பர் 15, பிற்பகல் 3 மணிக்கு Elisabeth Borne அழைக்கப்பட்டுள்ளார்.

இந்த விசாரணைகளின் போது 2023-2024 ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான பொது நிதியில் ஏற்பட்ட பற்றாக்குறை தொடர்பான கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்க உள்ளனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்