பரிசில் இருந்து - அமெரிக்காவுக்கு மற்றுமொரு நேரடி விமான சேவை!

1 கார்த்திகை 2024 வெள்ளி 10:00 | பார்வைகள் : 6707
பரிசில் இருந்து அமெரிக்காவின் ஒர்லாண்டோ மாநிலத்துக்கு நேரடி விமான சேவை ஒன்றை எயார் பிரான்ஸ் அறிமுகப்படுத்த உள்ளது.
அடுத்த ஆண்டு மே 21 ஆம் திகதி முதல் இந்த சேவைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக எயார் பிரான்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. எயார்பஸ் A350-900 விமானத்தினை பரிஸ் சாள்-து-கோல் விமான நிலையத்தில் இருந்து Orlando வுக்கு நேரடியாக இயக்க உள்ளது.
பரிசில் இருந்து மாலை 5.05 மணிக்கு புறப்படும் இந்த விமானம், பிரான்ஸ் நேரம் இரவு 8.45 மணிக்கு சென்றடையும் எனவும், ஒர்லாண்டோவில் இருந்து இரவு 11.00 மணிக்கு புறப்படும் விமானம் பகல் 1.30 மணிக்கு பரிசை வந்தடையும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. (அனைத்தும் உள்ளூர் நேரம்)
34 business இருக்கைகளும், 24 premium economy இருக்கைகளும், 266 economy இருக்கைகளும் கொண்ட இந்த விமானம், வாரத்தில் நான்கு நாட்கள் இயக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025