Paristamil Navigation Paristamil advert login

உலகின் பல பகுதிகளில் போர் பதற்றம் - சுவிட்சர்லாந்து  அரசின் அதிரடி

 உலகின் பல பகுதிகளில் போர் பதற்றம் - சுவிட்சர்லாந்து  அரசின் அதிரடி

1 கார்த்திகை 2024 வெள்ளி 09:08 | பார்வைகள் : 5667


இஸ்ரேல் ஹமாஸ், ஈரான், ஹிஸ்புல்லா மோதல், ரஷ்யா உக்ரைன் மோதல், என உலகின் பல பகுதிகளில் போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில், கூடுதல் வெளிநாட்டு ஆபரேஷன்களில் பங்கேற்பது குறித்து சுவிஸ் ராணுவம் திட்டமிட்டுவருகிறது.

இப்படி வெளிநாட்டு ஆபரேஷன்களில் பங்கேற்பது சுவிட்சர்லாந்தின் பாதுகாப்புக்கு பங்களிப்பை ஏற்படுத்தும் என நம்புவதாக சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது.


ஏற்கனவே, 1999ஆம் ஆண்டு முதல், Kosovo peacekeeping mission, KFOR என்னும் அமைதிகாக்கும் திட்டத்தில் சுவிட்சர்லாந்து பங்கேற்று வருகிறது.

சுவிஸ் ராணுவ வீரர்கள் 215 பேர் தற்போது Kosovo நாட்டில் தங்கியுள்ளார்கள்.

இந்நிலையில், சுவிஸ் மாகாணங்கள் கவுன்சிலின் வெளி விவகாரங்கள் கமிட்டி, கூடுதல் வெளிநாட்டு ஆபரேஷன்களில் சுவிட்சர்லாந்து பங்கேற்பதை எளிதாக்க விரும்புவதாக தெரிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்