கர்ப்பமான எமி ஜாக்சன்
1 கார்த்திகை 2024 வெள்ளி 14:43 | பார்வைகள் : 5947
மதராசபட்டினம், தாண்டவம், ஐ, தெறி, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்தவர் லண்டன் நடிகை எமி ஜாக்சன். தமிழில் கடைசியாக மிஷன் சாப்டர் 1 என்ற படத்தில் நடித்த எமி ஜாக்சன், அதன் பிறகு ஹாலிவுட்டில் சூப்பர் கேர்ள் என்ற வெப் தொடரில் நடித்தார். கடந்த 2015ம் ஆண்டு ஜார்ஜ் பெனாயிட்டோ என்பவருடன் லிவிங் டுகெதர் உறவில் இருந்து வந்த எமி திருமணத்திற்கு முன்பே ஒரு ஆண் குழந்தை பெற்றெடுத்தார். அதையடுத்து அவர்கள் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில், திருமணம் நடைபெறுவதற்கு முன்பே அவர்கள் பிரிந்து விட்டார்கள்.
202ம் ஆண்டு ஜார்ஜை பிரிந்த எமி ஜாக்சன் அதன்பிறகு எட் வெஸ்ட்விக் என்ற ஹாலிவுட் டிவி நடிகருடன் டேட்டிங் செய்து வந்தார். கடந்த ஆகஸ்ட் ஒன்பதாம் தேதி அவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், தற்போது எட் வெஸ்ட்விக்குடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார் எமி ஜாக்சன். அதில் அவர் மீண்டும் கர்ப்பமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அதோடு திருமணமாகி மூன்றே மாதங்களில் எமி ஜாக்சன் ஐந்து மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.


























Bons Plans
Annuaire
Scan