இலங்கையில் தாக்குதல் திட்டம்; மேலும் பலர் கைது

2 கார்த்திகை 2024 சனி 10:31 | பார்வைகள் : 3857
அறுகம்பே பகுதியில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பலர் கைதாகியுள்ளனர்.
அந்த வகையில், மாலைதீவு பிரஜை உட்பட 06 பேர் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது பயங்கரவாத புலனாய்வு பிரிவில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.