வெளிநாட்டு கடவுச்சீட்டு பிரச்சினையை தீர்க்க புதிய திட்டம்
2 கார்த்திகை 2024 சனி 12:56 | பார்வைகள் : 1341
நவம்பர் மாத இறுதியில் மேலும் 100,000 கடவுச்சீட்டுகளும் டிசம்பரில் மேலும் 150,000 கடவுச்சீட்டுகளும் பெறப்படும் என, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி வழங்கப்பட்டுள்ள வெளிநாட்டு நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின்படி, 'பி' பிரிவின் கீழ் இதுவரை 50,000 வெற்று கடவுச்சீட்டுகள் குடிவரவு திணைக்களத்திற்கு கிடைத்துள்ளன.
இதேவேளை, மற்றொரு தொகுதி வெற்று கடவுச்சீட்டுகளை கொள்வனவு செய்யும் பணியும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தினால் விண்ணப்பதாரர்களுக்கு சுமார் 1,600 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
டிசம்பர் தொடக்கத்தில் இருந்து, இந்தத் தொகை படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, விண்ணப்பதாரர்கள் கோரும் கடவுச்சீட்டுகளின் அளவிற்கு ஏற்ப கடவுச்சீட்டு வழங்கும் முறையை மாற்றியமைக்க முடியும், என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.