Paristamil Navigation Paristamil advert login

ஒரே நேரத்தில் 2 பட அப்டேட்களை கொடுத்த லோகேஷ்

ஒரே நேரத்தில்  2 பட அப்டேட்களை கொடுத்த லோகேஷ்

2 கார்த்திகை 2024 சனி 16:05 | பார்வைகள் : 473


தமிழ் சினிமாவில் இப்போது most wanted இயக்குனராக மாறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ் என்று கூறினால் அது மிகையல்ல. தன்னுடைய சினிமாடிக் யுனிவர்ஸ் என்கின்ற ஒரு விஷயத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு ஒரு புதுவித சினிமா அனுபவத்தை அவர் கொடுத்து வருகிறார். ஏற்கனவே அவருடைய இயக்கத்தில் வெளியான "கைதி", "விக்ரம்" மற்றும் "லியோ" ஆகிய திரைப்படங்களை தன்னுடைய யுனிவர்சுக்குள் இணைத்துள்ள லோகேஷ் கனகராஜ், விரைவில் பிரபல நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகவுள்ள "பென்ஸ்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் ராகவா லாரன்ஸை தன்னுடைய சினிமாடிக் யுனிவர்சுக்குள் கொண்டு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. விரைவில் அந்த திரைப்படம் குறித்த அறிவிப்புகளும் வெளியாகவுள்ளது. அதுமட்டுமல்லாமல் தனது LCUவின் குறும்படத்தையும் விரைவில அவர் வெளியிட உள்ளார்.

இந்த சூழலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து "கூலி" என்கின்ற திரைப்படத்தை அவர் இயக்க தொடங்கினார். இரண்டு மாதங்களுக்கு முன்பு அப்படத்தின் படபிடிப்பு பணிகள் துவங்கிய நிலையில் இடையில் சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்துக்கு செய்யப்பட்ட அறுவை சிகிச்சையின் காரணமாக சில கால ஓய்வுக்கு பிறகு தற்பொழுது மீண்டும் அவர் கூலி படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். அந்த திரைப்படம் குறித்து கேட்ட பொழுது, இன்னும் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் மீதம் உள்ளதாகவும், 2025 ஆம் ஆண்டு தொடக்கத்திலேயே அந்த திரைப்படத்தை நிச்சயம் எதிர்பார்க்கலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

இந்த சூழலில் கடந்த 2023ம் ஆண்டு பிரபல நடிகர் தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் லியோ. உலக அளவில் 450 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து அந்த திரைப்படம் வெற்றி படமாக மாறியது. இந்நிலையில் அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இப்போது வாய்ப்புகள் இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே, காரணம் தளபதி விஜய் தற்போது தன்னுடைய அரசியல் பணியை மேற்கொண்டு வருகிறார். இருப்பினும் தளபதி விஜய் ஓகே என்று சொன்னால் லியோ 2 கதை ரெடியாக இருக்கிறது, தான் அந்த திரைப்படத்தை எடுக்க முழுமையாக தயாராக இருப்பதாக லோகேஷ் கூறியுள்ளார். 

தீபாவளிக்கு பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் வெளியாகியுள்ள பிரபல நடிகர் கவினின் ப்ளடி பெக்கர் திரைப்படத்தை பார்த்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ், அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்தபோது தான் இந்த இரண்டு முக்கிய தகவல்களையும் கொடுத்திருக்கிறார். அது மட்டும் அல்ல தயாரிப்பாளராக களம் இறங்கியுள்ள நெல்சனுக்கு தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்து இருக்கிறார். ஆங்கில திரைப்படங்களில் மட்டுமே பார்த்த ஒரு கதை அம்சத்தை தற்பொழுது தமிழ் திரைப்படங்களில் பார்ப்பதும் தனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறி கவினுக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை கூறியிருக்கிறார்.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்