Paristamil Navigation Paristamil advert login

இலங்கை தேர்தல் - உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விசேட விநியோகம் - தபால் திணைக்களம்

இலங்கை தேர்தல் - உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விசேட விநியோகம் - தபால் திணைக்களம்

2 கார்த்திகை 2024 சனி 16:13 | பார்வைகள் : 4940


உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் ஞாயிற்றுக்கிழமை (03) காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை விநியோகிக்கப்படும்.

 வாக்காளர் அட்டை விநியோகம் எதிர்வரும்  வியாழக்கிழமையுடன் நிறைவடையும். குறித்த காலப்பகுதிக்குள் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் தபால் நிலையத்தை நாடவும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித கே. ரணசிங்க தெரிவித்தார்.

தபால் திணைக்களத்தில் சனிக்கிழமை (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

பொதுத்தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் மற்றும் இதர ஆவணங்களை விநியோகிக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.தபால்மூல வாக்குச்சீட்டுக்களை விநியோகிக்கும் பணிகளை பாதுகாப்பான முறையில் முன்னெடுத்துள்ளோம்.

உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கடந்த மாதம் 27 ஆம் திகதி முதல் விநியோகிக்கப்படுகிறது. இதுவரை சுமார் 60 ஆயிரம் பொதிகள் ஊடாக வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

பொதுத்தேர்தல் நிறைவடையும் வரை தபால் ஊழியர்களின் சகல விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளன. இன்றைய தினம் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் விநியோகிக்கப்படும்.

தேர்தல்கள் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் வியாழக்கிழமை (7) உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோக பணிகள் நிறைவுறுத்தப்படும். ஆகவே இக்காலப்பகுதியில் வாக்காளர் அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் தமது வதிவிட பகுதியில் உள்ள தபால் நிலையத்தை நாடி வாக்காளர் அட்டைகளை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

6 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்