canal du Loing கால்வாயில் இருந்து மூன்று தொன் எடையுள்ள இறந்த மீன்கள் அகற்றம்!

2 கார்த்திகை 2024 சனி 17:27 | பார்வைகள் : 7405
Seine-et-Marne மாவட்டத்தில் உள்ள canal du Loing கால்வாய் மாசடைந்து மீன்கள் இறந்து கிடப்பதாக செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில், நேற்று நவம்பர் 1 ஆம் திகதி அக்கால்வாயில் இருந்து மூன்று தொன் எடையுள்ள இறந்த மீன்கள் அகற்றப்பட்டுள்ளன.
கால்வாய் தண்ணீர் மாசடைந்ததன் காரணமாக இந்த மீன்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 13 கி.மீ நீளமான குறித்த கால்வாயை உடனடியாக வடிகட்டி சுத்திகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்து வரும் 20 நாட்களுக்கு இந்த சுத்திகரிப்பு பணிகள் இடம்பெற உள்ளதாகவும், அங்கு மீன் பிடிக்கவும் விலங்குகள் தண்ணீர் அருந்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025