இஸ்ரேல் மீது ரொக்கட் தாக்குதலை மேற்கொண்ட லெபனான்...

3 கார்த்திகை 2024 ஞாயிறு 06:45 | பார்வைகள் : 6190
இஸ்ரேல் நாடு காசா மீது போர் தொடுத்து வரும் நிலையில் பல ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவு வழங்கும் நாடுகள் இஸ்ரேல் நாட்டின் மீது தாக்குதலை மேற்கொண்டு வருகின்றது.
லெபனானிலிருந்து மேற்கொள்ளப்பட்ட ரொக்கட் தாக்குதல்களில் இஸ்ரேலில் 11 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரொக்கட் வீடொன்றை தாக்கியது என இஸ்ரேலின் அவரசசேவை பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
நாங்கள் அந்த வீட்டிற்கு சென்று பார்த்தவேளை புழுதி மண்டலத்தையும் சிறுவர்கள் பெண்கள் அலறுவதையும் பார்த்தோம் என ரொக்கட் தாக்குதல் இடம்பெற்ற டிராவை சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
எங்களால் அந்த வீட்டிலிருந்தவர்களை காப்பாற்ற முடிந்தது எவரும் கொல்லப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இஸ்ரேலிய தலைநகரின் புறநகர் பகுதியில் உள்ள இராணுவ தளமொன்றை இலக்குவைத்ததாக ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது.
ரொக்கட் வெடிப்புச்சிதறல்கள் காரணமாக 11 பேர் காயமடைந்துள்ளனர் என இஸ்ரேலிய இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
3