Paristamil Navigation Paristamil advert login

குரங்கும் ஆமையும்

குரங்கும் ஆமையும்

3 கார்த்திகை 2024 ஞாயிறு 07:46 | பார்வைகள் : 3593


ஒரு காட்டு பகுதியில இருக்குற குளத்துக்கு பக்கத்துல ஒரு குரங்கும் ஆமையும் ரொம்ப நண்பர்களா இருந்துச்சுங்க

ஒருநாள் குளத்துல குதிச்ச குரங்கு நீச்சல் அடிக்க முயற்சி செஞ்சுச்சு ,எப்படி முயற்சி செஞ்சாலும் அதுக்கு சரியா நீச்சல் அடிக்க வரல

அப்ப தண்ணியில குதிச்ச ஆமை ரொம்ப அழகா நீச்சல் அடிச்சுச்சு ,அத பார்த்த குரங்குக்கு ரொம்ப பொறாம வந்திடுச்சு

அப்பத்தான் நீங்க மட்டும் எப்படி சுலபமா நீச்சல் அடிக்கிறீங்க ஆமையாரேனு கேட்டுச்சு குரங்கு

அதுக்கு ஆமை சொல்லுச்சு என்னோட உடம்பு அப்படி இருக்கு எனக்கு இருக்குற பெரிய ஓடு தண்ணியில நீந்த உதவி செய்யுது அதனால தான் என்னால் சுலபமா நீந்த முடியுதுனு சொல்லுச்சு

இத கேட்ட முட்டாள் குரங்கு அடடா சுலபமா நீச்சல் அடிக்க பெரிய ஓடு இருந்தா போதும்னு நம்பிடுச்சு

உடனே பக்கத்துல இருந்த இலவம் பஞ்சுகள சேகரிச்சு தன்னோட முதுகுல பந்து போல கட்டிகிடுச்சு

ஆமை போல இப்ப தனக்கு பெரிய ஓடு வந்திடுச்சுனு சொல்லிட்டு தண்ணிக்குள்ள குதிச்சுச்சு குரங்கு

தண்ணில குதிச்சதும் பஞ்சு நனைஞ்சு குரங்கை உள்ள அமுக்க ஆரம்பிச்சுடுச்சு

இத பார்த்த ஆமை தன்னோட நண்பர்களை கூப்பிட்டு குரங்கு கட்டியிருந்த பஞ்ச பிச்சி போட்டு ,குரங்கை தண்ணியில இருந்து காப்பாத்துச்சு

முட்டாள் தனமா நடந்துக்கிட்டத நினச்சு வெட்க பட்டுச்சு குரங்கு

7 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்