Paristamil Navigation Paristamil advert login

சமையல் உபகரணத்தை அறிமுகப்படுத்திய பிரெஞ்சு தேசம்..!!

சமையல் உபகரணத்தை அறிமுகப்படுத்திய பிரெஞ்சு தேசம்..!!

5 புரட்டாசி 2019 வியாழன் 10:30 | பார்வைகள் : 18065


 இன்றைய நாளில் உணவகங்களில் எல்லாம் பெரும் உபகரணங்கள் பயன்பாட்டில் இருப்பதை நீங்கள் பாத்திருப்பீர்கள். ஏன் உங்கள் வீட்டில் கூட மிக்ஸி, கிரைண்டர், க்ரேப்பர் என எண்ணற்ற உபகரணங்கள் இருக்கும். இவை அனைத்தும் உங்கள் வேலையை சுலபமாக்கின்றன. 

 
ஆனால் பெரும் தொழிற்சாலைகளில் இருக்கும் இயந்திரங்கள் போல், சமையலுக்கு கூட பயன்படுத்தலாம் எனும் 'ஐடியா' பிரெஞ்சு தேசத்தில் தான் தோன்றியது. 
 
Pierre Verdun எனும் பிரெஞ்சு மனிதர் முதன் முதலாக தனது நண்பரை உதவியாளராக்கிக்கொண்டு இந்த இயந்திரத்தை கண்டுபிடித்தார். 
 
Pierre Verdun, ஒரு உணவகத்தின் நிறுவனர். இவர் தாமதமாக உணவை வழங்குகின்றார் என அவரது வாடிக்கையாளர்கள்  அன்பாக கண்டிந்துகொண்டார்கள். 
 
ஏன் சமையலுக்கு தாமதமாகின்றது என ஆராய்ந்த அவர், உணவை 'கலப்பதற்கும்' அரைப்பதற்கும் தான் மிகுந்த தாமதமாகின்றது என்பதை கண்டுபிடித்தார். 
 
இதற்கு என்ன செய்யலாம் என அவர் யோசித்ததின் விளைவாக 'சோப்பர்' பிறந்தது. 
 
இரண்டு பெரிய ப்ளேடுகளை உருவாக்கி, அதை ஒரு வட்டமான பாத்திரத்துக்குள் வெவ்வேறு திசையை பார்த்த மாதிரி பொருத்தி, அதை சுற்ற வைத்தார். பின்னர் உள்ளே சில காய்கறிகளை போட்டார். ப்ளேடுகள் காய்கறிகளை துண்டுகளாக வெட்டித்தள்ளின. நேரம் மிச்சமானது. 
 
அட...!!
 
1960 ஆம் ஆண்டு இந்த வரலாறு காணாத சம்பவம் இடம்பெற்றது. 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்