டொறன்டோ திரையரங்கில் இரண்டு சந்தேக நபர்களினால் பதற்றம்

4 கார்த்திகை 2024 திங்கள் 08:15 | பார்வைகள் : 5814
கனடாவின் டொறன்டோ பகுதியில் அமைந்துள்ள திரையரங்கு ஒன்றில் இரண்டு சந்தேக நபர்களினால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இனம் தெரியாத பொருள் ஒன்றை குறித்த இரண்டு சந்தேகளும் எரித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் காரணமாக திரையரங்கில் இருந்தவர்கள் அவசர அவசரமாக பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
டொரன்டோவின் வுட்சைட் சதுக்கத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
தீ உடனடியாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு குண்டு செலிழிக்கும் பிரிவினர் அழைக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
2