அவுஸ்திரேலியாவில் வேலை வாய்ப்பு - இலங்கையர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த நபர்

4 கார்த்திகை 2024 திங்கள் 13:11 | பார்வைகள் : 3364
அவுஸ்திரேலியாவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பொதுமக்களிடம் நிதி மோசடி செய்த குற்றச்சாட்டின் பேரில் 64 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் பொதுமக்களிடமிருந்து சுமார் ஒரு மில்லியன் ரூபாய் வரை மோசடி செய்துள்ளதாகவும் மொரட்டுவை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அவர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 64 வயதுடையவராவார்.
சந்தேக நபர் தொடர்பில் மொரட்டுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.