Paristamil Navigation Paristamil advert login

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

4 கார்த்திகை 2024 திங்கள் 13:26 | பார்வைகள் : 4767


அரசாங்கம் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துமாக இருந்தால், அதனைச் சமாளிக்கத் தயார் நிலையில் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். 
 
ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதுதொடர்பான தயார் நிலையை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
 
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் தீர்மானத்தை அரசாங்கமும், நிதித்துறை அதிகாரிகளுமே மேற்கொள்ள வேண்டும். 
 
இதற்கான பரிந்துரைகள் மத்திய வங்கியினால் அரசாங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. இலங்கை கடந்த ஆண்டும் இந்த ஆண்டும் நடப்பு கணக்கில் மிகை நிலையைக் கொண்டிருந்தது. 
 
அடுத்த ஆண்டு வாகன இறக்குமதி அனுமதி வழங்கப்படுமாக இருந்தால், மத்திய வங்கியின் நடப்பு கணக்கில் சிறியளவான பற்றாக்குறை ஏற்படக்கூடும், ஆனால் அது சமாளிக்கக்கூடியதே என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

6 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்