Paristamil Navigation Paristamil advert login

பரிஸ் : பல்வேறு பகுதிகளில் இன்று முதல் போக்குவரத்து வரையறுப்பு!

பரிஸ் : பல்வேறு பகுதிகளில் இன்று முதல் போக்குவரத்து வரையறுப்பு!

4 கார்த்திகை 2024 திங்கள் 13:31 | பார்வைகள் : 3150


தலைநகர் பரிசில் இன்று முதல் ’Zone à trafic limité’ எனப்படும் வரையறுக்கப்பட்ட போக்குவரத்து பகுதிகள் நடைமுறைக்கு வந்துள்ளது.

பரிசின் சில நெருக்கடியான பகுதிகளில் மகிழுந்து செல்வதை தடுப்பதே இதன் நோக்கமாகும். நவம்பர் 4, இன்று திங்கட்கிழமை முதல் பரிசின் மையப்பகுதி எனப்படும் 1 ஆம் 2 ஆம் 3 ஆம் மற்றும் 4 ஆம் வட்டாரங்களை இணைத்த ஒரு பகுதியில் இந்த Zone à trafic limité நடைமுறைக்கு வருகிறது.



மேற்கு பகுதியில் Place de la Concorde, Rue Royale, Place de la Madeleine பகுதியை எல்லையாகவும்,

வடக்குப்பகுதியில் Boulevard de la Madeleine, Boulevard des Capucines, Boulevard des Italiens, Boulevard Montmartre, Boulevard Poissonnière, Boulevard de Bonne Nouvelle, Boulevard Saint-Denis, Boulevard Saint-Martin ஆகிய பகுதிகளை எல்லைகளாகவும்,

கிழக்கு பகுதியில் Place de la République, Boulevard du Temple, Boulevard des Filles du Calvaire, Boulevard Beaumarchais, Place de la Bastille மற்றும் Boulevard Bourdon ஆகிய பகுதிகளை எல்லைகளாகவும்,

தெற்கில் Quai Henri IV மற்றும் Quai des Tuileries பகுதிகளைக் கொண்ட பகுதியே இந்த கட்டுப்பாட்டுக்குள் வருகிறது.


இப்பகுதிகளில் வசிப்பவர்கள் தவிர்த்து, VTC வாடகை மகிழுந்து சேவைகளுக்கும், சில அனுமதி பெற்ற மகிழுந்துகளையும் தவிர்த்து, வேறு எந்த தனியார் மகிழுந்துகளும் உள்ளே அனுமதி இன்று பயணிக்க முடியாது என தெரிவிக்கப்படுகிறது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்