Paristamil Navigation Paristamil advert login

கனடாவில் ஹிந்து கோவிலில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

கனடாவில் ஹிந்து கோவிலில் தாக்குதல்: பிரதமர் மோடி கடும் கண்டனம்

5 கார்த்திகை 2024 செவ்வாய் 03:12 | பார்வைகள் : 924


கனடாவில் ஹிந்து கோவிலில் பக்தர்கள் மீது காலிஸ்தான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

கனடாவின் பிரம்ப்டன் நகரில் ஹிந்து கோவில் உள்ளது. இப்பகுதியில் இந்திய தூதரக அதிகாரிகள் முகாம் அலுவலகம் அமைத்து இருந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காலிஸ்தான் பயங்கரவாதிகள் அங்கு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், கோவிலில் இருந்த பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பக்தர்கள் மீது தாக்குதல் நடத்தினர். கையில் இருந்த கொடிக்கம்பத்தை வைத்தும் தாக்குதல் நடத்தினர். இதனால் அந்த பகுதி போர்க்களமாக காட்சியளித்தது. இந்த சம்பவத்திற்கு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.


இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது: பிரிவினைவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் திட்டமிட்டு இந்த வன்முறையை அரங்கேற்றி உள்ளனர். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய சம்பவம். இது போன்ற தாக்குதல் சம்பவங்களில் இருந்து அனைத்து வழிபாட்டு தலங்களையும் பாதுகாக்க வேண்டும் என கனடா அரசை வலியுறுத்துகிறோம். இந்த வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். கனடாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து எங்களுக்கு கவலை உள்ளது.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்