சவுதி அரேபியாவில் விடுக்கப்பட்டுள்ள வானிலை எச்சரிக்கை!
5 கார்த்திகை 2024 செவ்வாய் 10:55 | பார்வைகள் : 1768
சவுதி அரேபியாவின் அல்-ஜவ்ஃப்(Al-Jawf) பகுதியில் அதிசயத்தக்க வகையில் பனிப்பொழிவு ஏற்பட்டு நிலப்பரப்புகள் மற்றும் மலைப்பகுதிகளில் பனிப்படலம் படர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி, சவுதி செய்தி நிறுவனம் தெரிவித்தபடி, இந்த அசாதாரண வானிலை பள்ளத்தாக்குகளை புத்துயிர்ப்படுத்தி அழகிய நீர்வீழ்ச்சிகளை உருவாக்கி உள்ளது.
இந்த குளிர்கால மாற்றத்திற்கு மத்தியில், சவுதி வானிலைத் துறை வரும் நாட்களில் தொடர்ந்து கடுமையான வானிலைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்டுகளும் (UAE) இதேபோன்ற வானிலை அமைப்புகளின் தாக்கத்திற்கு உள்ளாகியுள்ளது.
தேசிய வானிலை மையம் மழை, இடியுடன் கூடிய மழை மற்றும் பனி கற்கள் குறித்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த மாற்றங்கள் அரேபியக் கடலில் இருந்து ஓமன் நோக்கி நீண்டுள்ள குறைந்த அழுத்த அமைப்புகளால் ஏற்படுகின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதியில் ஏற்பட்டுள்ள இந்த பனிப்பொழிவு, சஹாரா பாலைவனத்தில் ஏற்பட்ட வெள்ளம் ஆகியவை மாறிவரும் காலநிலை வடிவங்களை எடுத்துக் காட்டுகிறது.