Paristamil Navigation Paristamil advert login

ஜப்பானில்  மூடப்பட்ட புகுஷிமா அணுமின் நிலையம்

ஜப்பானில்  மூடப்பட்ட புகுஷிமா அணுமின் நிலையம்

5 கார்த்திகை 2024 செவ்வாய் 11:06 | பார்வைகள் : 339


ஜப்பானில் 13 வருடங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட புகுஷிமா அணுமின் நிலையம் திறந்து 5 நாட்களிலே மீண்டும்  மூடப்பட்டுள்ளது.

ஜப்பானில் 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட 9 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ஏற்பட்ட சுனாமியால் புகுஷிமாவில் உள்ள ஒனகாவா அணுமின் நிலையம் கடுமையாக சேதம் அடைந்ததையடுத்து அந்த அணுமின் நிலையம் மூடப்பட்டது.

இங்கு பராமரிப்பு பணிகள் நிறைவடைந்ததால் கடந்த 29ஆம் திகதி புகுஷிமா அணுமின் நிலையம் திறக்கப்பட்டது.

எனவே விரைவில் அங்கு மின் உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் நியூட்ரான் தரவு தொடர்பான இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக திறக்கப்பட்ட 5 நாட்களில் புகுஷிமா அணுமின் நிலையம் மீண்டும் மூடப்பட்டது.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்