லண்டனில் இருந்து இலங்கை வந்த பெண் வெட்டிக் கொலை
5 கார்த்திகை 2024 செவ்வாய் 13:42 | பார்வைகள் : 8552
திருகோணமலை தன்வந்திரி தனியார் வைத்தியசாலையின் உரிமையாளர் மருத்துவ நிபுணர் கனேகபாகுவின் மனைவி திருமதி ஏஞ்சலின் சுமித்ரா (வயது 64) வைத்தியசாலையில் வைத்துக் கொடூரமான முறையில், செவ்வாய்க்கிழமை (11) வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மரணமடைந்தவரின் சகோதரியின் கணவரான சுதர்சன் (வயது 59) என்பவரே இவரைக் கொலை செய்துள்ளார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரால் அவர்,கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை. கொலையானவர் மூன்று மாதங்களின் பின் லண்டனில் இருந்து திங்கட்கிழமை இரவு இலங்கை திரும்பி அன்றிரவு கொழும்பிலிருந்து திருகோணமலை வந்திருந்த நிலையிலேயே சம்பவம் நடைபெற்றுள்ளது.
சடலம் பொலிஸாரால் பொறுப்பேற்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு சட்ட வைத்திய பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது.
இந்தக் கொலை தொடர்பில் திருகோணமலை தலைமையகப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி
RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025


























Bons Plans
Annuaire
Scan