ஜோர்தன் பாதெல்லா எழுதிய புத்தகம்...!

5 கார்த்திகை 2024 செவ்வாய் 17:01 | பார்வைகள் : 11515
ஜனாதிபதி வேட்பாளர் ஜோர்தன் பாதெல்லா எழுதிய புத்தம் ஒன்று இவ்வார இறுதியில் வெளியாக உள்ளது.
இளைஞர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக உள்ள ஜோர்தன் பாதெல்லா, சமூகவலைத்தளங்களில் தனது சுவாரஷ்யமான காணொளிகள் மூலம் பிரபலமடைந்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற பொதுத்தேர்தலில் அவர் போட்டியிட்ட Rassemblement national கட்சி இரண்டாவது பெரும்பான்மை பெற்றிருந்தது.
இந்நிலையில், அவர் எழுதியுள்ள “நான் எதைத்தேடுகிறேன்” என பொருட்படும் Ce que je cherche” எனும் புத்தகம் வரும் நவம்பர் 9 ஆம் திகதி வெளியாக உள்ளது.
இந்த புத்தகத்தில் பாதெல்லாவின் சிறு வயது அனுபவங்களும், அவர் எதிர்கொண்ட விடயங்கள் குறித்தும் பகிர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
6 நாள்கள் முன்னர்
நினைவஞ்சலி

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025