கடவுளுக்கு அனுப்பப்பட்ட €4,000 ...!!

15 ஆவணி 2019 வியாழன் 10:30 | பார்வைகள் : 20958
சில நபர்களுக்கு சோதனைகள் எந்த ரூபத்திலும் வரலாம் என்பதற்கு இன்றைய பிரெஞ்சுப்புதினம் கொண்டுவரும் செய்தி சாட்சி..
பிரான்சின் மத்திய நகரமான Vichy நகரில் ஒரு சுவாரஷ்யமான சம்பவம் 2015 ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது. நவம்பர் மாதம் ஒன்றின் நன்நாளில், இங்குள்ள தபால் நிலையம் ஒன்றின் தபால்பெட்டியில் வித்தியாசமான கடிதம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. கடிதத்தில் எழுதியிருந்த முகவரியை பார்த்து தபால் ஊழியர் ஒரு நிமிடம் ஆடிப்போய்விட்டார்.
அதில் 'கடவுளுக்கு...' என எழுதப்பட்டிருந்தது. கடவுளுக்கு கடிதம் அனுப்பலாம் தப்பில்லை... ஆனால் முகவரி.. அதுதானே தப்பு... தபால் நிலையத்துக்கு என்ன செய்வதென்றே புரியவில்லை. கடிதத்தை கிடப்பில் போட்டுவிட்டனர்.
ஆனால் இந்த சம்பவம் முடிவுக்கு வரவில்லை. அடுத்த வாரத்தில் மீண்டும் அதே 'கடவுளுக்கு' எனும் கடிதம் வந்து சேர்ந்தது.
இப்படியாக நான்கு ஐந்து வாரங்கள் 'கடவுளுக்கு' எனும் கடிதம் வந்து சேர, தபால் நிலையம் தலையை பிய்த்துக்கொண்டது.
இதை இப்படியே விட்டால் சரிவராது என எண்ணிய Vichy தபால்துறை, ஒரு நாளில் கடிதத்தை பிரித்து பார்த்துவிடலாம் என தீர்மாணித்தது.
அதன்படியே, கடவுளுக்கு அனுப்பப்பட்ட கடிதம் ஒன்றை பிரித்து பார்த்தனர். அதில் இருந்தது €200 ரொக்கப்பணம். மேலும் அதிர்ச்சி..
அனைத்து கடிதங்களையும் பிரித்தனர். உள்ளே இருந்தது முழுவதும் பணத்தாள்கள் தான். மொத்தமாக €4,000 பணத்தினை 'யாரோ' கடவுளுக்கு அனுப்பியுள்ளனர்.
கடவுளின் முகவரிக்கு தபால் ஊழியர்கள் எங்கு போவார்கள் பாவம்.. இறுதியாக இந்த வழக்கை விசாரிக்க அவர்கள் காவல்துறையினரை நாடினார்கள்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1