அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி ...! ஆதரவாளர்கள் கொண்டாட்டம்!
6 கார்த்திகை 2024 புதன் 08:55 | பார்வைகள் : 2259
அமெரிக்க தேர்தலி டிரம்ப் வெற்றி பெற்றுள்ள நிலையில் டிரம்பின் ஆதரவாளர்கள வெற்றிகொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் கூறுகின்றன.
இதுவரை வெளியான தகவல் படி, அமெரிக்க அதிபர் தேர்தலில் கமலா ஹாரிஸ் 214 தொகுதிகளிலும் டிரம்ப் 267 தொகுதிகளிலும் வெற்றிபெற்றுள்ளனர்.
இந்நிலையில் டிரம்பின் ஆதர்வாளர்கள் இப்போதே வெற்றி கொண்டாட்டங்களை ஆரம்பித்துள்ளள்ளனர்
அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் வெற்றியை நோக்கி சென்றுகொண்டிருக்கும் டொனால்ட் டிரம்ப் புளோரிடாவில் தனது ஆதரவாளர்களிற்கு உரையாற்றவுள்ளார்.
நோர்த்கரோலினா ஜோர்ஜியா வெற்றியை தொடர்ந்தே டிரம்ப் நாட்டு மக்களிற்கு உரையாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கபப்டுகின்றது.
பல தடைகளை தாண்டி அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் 47 ஆவது அதிபராக பதவியேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.