இலங்கையின் டொலர் கையிறுப்பு பாரிய அளவு அதிகரிப்பு
7 கார்த்திகை 2024 வியாழன் 11:58 | பார்வைகள் : 1361
இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்கள் கடந்த ஒக்டோபர் மாதத்தில் 6.46 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இது கடந்த செப்டம்பர் மாதத்தில் பதிவான 5.99 பில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் 7.9 வீத அதிகமாகும்.
உத்தியோகபூர்வ கையிருப்பு சொத்துக்களின் முக்கிய அங்கமான இலங்கையின் வெளிநாட்டு நாணய கையிருப்பு 6.38 பில்லியன் அமெரிக்க டொலராக அதிகரிப்பைக் காட்டியுள்ளது. செப்டம்பரில் கையிருப்பில் இருந்த 5.94 பில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் இது 7.3 வீத வளர்ச்சியாகும்.
உத்தியோகபூர்வ தங்க கையிருப்பு செப்டம்பரில் 40 மில்லியன் அமெரிக்க டொலராக இருந்ததுடன், ஒக்டோபரில் 42 மில்லியன் அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது. இது செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.8 வீத அதிகரிப்பாகும்.