Paristamil Navigation Paristamil advert login

பேராசிரியர் Samuel Paty கொலை வழக்கு.. அவரது இறுதி நிமிடங்கள் நீதிமன்றத்தில் காட்சிப்படுத்தப்பட்டன!

பேராசிரியர் Samuel Paty கொலை வழக்கு.. அவரது இறுதி நிமிடங்கள் நீதிமன்றத்தில் காட்சிப்படுத்தப்பட்டன!

8 கார்த்திகை 2024 வெள்ளி 07:00 | பார்வைகள் : 933


பேராசிரியர் Samuel Paty கொலை வழக்கில் தொடர்புடைய எட்டுப்பேர் கடந்த திங்கட்கிழமை முதல் நீதிமன்றத்தில் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். நேற்று நவம்பர் 7 ஆம் திகதி வியாழக்கிழமை , பேராசியர் Samuel Paty கொல்லப்படுவதற்கு முன்னரான இறுதி நிமிடங்கள் விபரிக்கப்பட்டன. இந்த வழக்கை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதிகள் அதனை பார்வையிட்டனர். பார்ப்பவர்களை நடுங்கச் செய்யும் இந்த கொலைச் சம்பவம் நீதிபதிகளை உறையச் செய்தது.

பயங்கரவாத தடுப்பு அமைப்பின் புலனாய்வாளர் (l'enquêteur de la sous-direction antiterroriste) பேராசியர் Samuel Paty இன் இறுதி 14 நிமிடங்களையும் விபரித்தார். அதில் இருந்து பெறப்பட்ட சில தகவல்களை கீழே இணைத்துள்ளோம்.
**

2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 16 ஆம் திகதி அன்று Samuel Paty கொல்லப்பட்டார்.

அவர் கற்பிக்கும் லீசேயில் இருந்து Conflans-Sainte-Honorine (Yvelines) வெளியேறிய 14 ஆவது நிமிடத்தில் 4.54 மணிக்கு அவர் கத்தியால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

பயங்கரவாதி Abdoullakh Anzorov, பேராசிரியர் Samuel Paty இனை பின் தொடர்ந்து சென்று, ஒரு பாதசாரி கடவையை கடக்கும் வரை தொடர்ந்து சென்று, பின்னர் கத்தி ஒன்றை உருவி எடுத்து பேராசியரை குத்துகின்றார்.

மொத்தமாக 14 தடவைகள் அவர் வெட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் பங்கரவாதி Anzorov இறந்து கிடந்த பேராசிரியர் Samuel Paty இனை தொலைபேசியில் படம் பிடித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்கிறான்.

உடனடியாக காவல்துறையினர் அழைக்கப்பட, சம்பவ இடத்தில் காவல்துறையினர் குவிக்கப்படுகின்றனர். பயங்கரவாதியின் கைகளில், உடையில் இரத்தம் இருக்க, மிக இலகுவாக அவனை அடையாளம் காண்கின்றனர். அப்போது பயங்கரவாதில் காவல்துறையினரை நோக்கி ‘அரை தானியங்கி’ ( semi-automatic ) துப்பாக்கியால் காவல்துறையினரை நோக்கி சுடுகின்றார். பதிலுக்கு காவல்துறையினர் பயங்கரவாதியை சுட்டுக்கொல்கின்றனர். அவன் உயிரிழந்தாக 5.04 மணிக்கு அறிவிக்கப்பட்டது.

பேராசிரியர் வன்முறை மனநிலை கொண்டவர் இல்லை. ஆனால் அவரது பையில் சுத்தியல் ஒன்று இருந்ததாகவும், கொல்லப்படுவதற்கு முன்னர் அவர் மீது அச்சுறுத்தல் இடம்பெற்றதை அடுத்து அவர் சுத்தியல் ஒன்றை தற்பாதுகாப்புக்காக வைத்திருந்ததாகவும் புலனாய்வாளர் தெரிவித்தார்.

பயங்கரவாதி Anzorov தாக்குதலுக்கு பயன்படுத்தியது 19 செ.மீ நீளமுடைய, 4.5 செ.மீ தடிமனுடைய் கத்தி ஒன்றாகும்.
**

இந்த தாக்குதலுக்கு அடிப்படை காரணமாக அமைந்தது 13 வயதுடைய மாணவி ஒருவர் தெரிவித்த பொய்க்காரணம் ஒன்றே ஆகும். ’நாளை முகமது நபியின் நிர்வாணப்படம் ஒன்றை காண்பிக்க உள்ளதாகவும், வகுப்பறையில் இருக்க விருப்பமில்லாதவர்கள் வெளியேறலாம்’ என Samuel Paty சொன்னதாகவும் குறித்த மாணவி அவரது தந்தை Chnina இடம் தெரிவித்துள்ளார்.

அதை அடுத்து இந்த சம்பவம் பெரும் பரபரப்புக்கு உள்ளாகியது. சமூகவலைத்தளங்களில் பரவிய இந்த செய்தினை அறிந்து Anzorov இந்த தாக்குதலை மேற்கொண்டதாகவும், மாணவியின் தந்தையும் அவனும் பலமுறை தொலைபேசியில் உரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, குறித்த மாணவி அன்றைய நாளில் பாடசாலைக்கு சமூகமளிக்கவே இல்லை எனவும், வீட்டில் பொய் சொல்லி தன்னைக் காப்பாற்றிக்கொள்ள தந்தையிடம் பொய் சொல்லியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்