மணிரத்னம் படத்தில் அபிஷேக் - ஐஸ்வர்யா ராய்?
8 கார்த்திகை 2024 வெள்ளி 06:54 | பார்வைகள் : 721
அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் பிரிந்து வாழ்வதாக வதந்திகள் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில், பிரபல தமிழ் இயக்குனரின் அடுத்த படத்தில் இருவரும் இணைந்து நடிக்க இருப்பதாக கூறப்படுவதால் அந்த வதந்தி முற்றுப்புள்ளி ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் பல படங்களில் இணைந்து நடித்துள்ளனர். குறிப்பாக, மணிரத்னம் இயக்கிய ’குரு’ என்ற படத்தில் இருவரும் இணைந்து நடித்த போது தான் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. அதன் பின்னர் இரு தரப்பு பெரியவர்கள் பேசி திருமணத்தை நடத்தி வைத்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகிய இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் விவாகரத்து செய்யப் போவதாகவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானாலும், இரு தரப்பிலிருந்து இதுகுறித்து எந்த விதமான தகவலும் வெளியிடவில்லை.
இந்த நிலையில், ’தக்லைஃப்’ படத்தை முடித்தவுடன், மணிரத்னம் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் இணைந்து நடிக்க இருப்பதாகவும், மணிரத்னம் தயாரித்து இயக்கும் இந்த படம் ஹிந்தியில் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படம் உறுதி செய்யப்பட்டால், அபிஷேக் - ஐஸ்வர்யா ராய் குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.