Paristamil Navigation Paristamil advert login

ஹனிமூன் செலவுக்காக நிதி வழங்க  ரஷ்ய அரசு திட்டம்

ஹனிமூன் செலவுக்காக நிதி வழங்க  ரஷ்ய அரசு திட்டம்

10 கார்த்திகை 2024 ஞாயிறு 05:31 | பார்வைகள் : 723


உக்கரைன் மற்றும் ரஷ்யா போரில் ரஷ்யாவின் மக்கள் தொகை பெருமளவில் குறைவடைந்துள்ளதாக புள்ளி விபரம் வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து  ரஷ்யாவிலுள்ள புதிதாக திருமணமான தம்பதி  ஹனிமூன் செல்வதற்கான நிதி வழங்க உள்ளதாக ரஷ்ய அரசு தீர்மானித்துள்ளது.

இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ரஷ்யா மற்றும் உக்ரைன் விரும்புவதாக கூறிய நிலையில், தொடா்ந்தும் போர் தாக்குதல் இடம்பெற்று வருகின்றது.

இதனால் ரஷ்யாவின் மக்கள் தொகை பெருமளவில் குறைந்துள்ளது.

இதே நிலை நீடித்தால் ரஷ்யாவின் மக்கள் தொகையில் பெரிய மாற்றம் ஏற்படும் எனவும், மக்கள் தொகை குறைந்த நாடாக ரஷ்யா மாறிவிடும் எனவும் அஞ்சப்படுகிறது.

இந்த நிலையில் சரிந்து வரும் மக்கள் தொகையை கருத்தில் கொண்டு பாலியல் சார்ந்த விஷயங்களுக்கு தனி அமைச்சகம் உருவாக்க ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக ரஷ்யாவின் அதிகார மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, ரஷ்யாவில் பாலியல் சார்ந்த துறைக்கு தனி அமைச்சகம் உருவாக்கப்பட உள்ளது.

இந்த அமைச்சகத்தின் கீழ் நாட்டில் உள்ள பாலியல் தொடர்பான விஷயங்கள் குறித்து உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என கூறப்படுகிறது.

மேலும் மக்கள் தொகை இழப்பை சரிகட்டுவதற்கு ரஷ்யாவில் இரவு 10 மணி முதல் அதிகாலை 2 மணி வரை இணைய சேவையை துண்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் புதிதாக திருமணமான தம்பதி, ஹனிமூன் செல்வதற்கு அறை எடுப்பதற்கான தொகைக்கு அரசு நிதி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பல்வேறு வழிகளில் ரஷ்யா தனது மக்கள் தொகையை அதிகாிக்கும் முயற்சிகளில் ஈடுபட உள்ளது
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்